அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஜூலை 25 ஆம் திகதி முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலை சென்று கல்வி பயிலவும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் கற்றல் முறைகளை கடைப்பிடிக்கவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அதிபர்கள், மேலதிகமாக மாகாண கல்வி செயலாளர்கள், மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்வி பணிப்பாளர்கள், பிரதேச கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



Add comment
You must be logged in to post a comment.